தாண்டவ் வெப் தொடரில் இந்து கடவுளை அவமதித்ததாக இந்தி நடிகர் சயீப் அலிகான் உள்பட 5 பேர் மீது வழக்கு


நடிகர் சயீப் அலிகான்.
x
நடிகர் சயீப் அலிகான்.
தினத்தந்தி 25 Jan 2021 12:54 AM IST (Updated: 25 Jan 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

தாண்டவ் வெப் தொடரில் இந்து கடவுளை அவமதித்தாக பெங்களூரு போலீஸ் நிலையத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு.

இந்தியில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சயீப் அலிகான். இவர், தாண்டவ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ளார். பர்கான் அக்தர் தயாரித்துள்ளார். 

தாண்டவ் வெப் தொடரில் இந்து மத கடவுளை அவமதித்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக நாட்டில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் நடிகர் சயீப் அலி கான், இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாண்டவ் வெப் தொடரில் இந்து கடவுளை அவமதித்து இருப்பதாகவும், இதுதொடர்பாக தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் சயீப் அலிகான் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் கோரி சமூக ஆர்வலர் ஆரத்யா என்பவர் பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

அந்த வெப் தொடரில் இடம் பெற்றுள்ள வீடியோ காட்சிகளையும் அவர் போலீசாரிடம் வழங்கி இருந்தார்.

இந்த நிலையில், தாண்டவ் வெப் தொடரில் இந்து கடவுளை அவமதித்து இருப்பதாக கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் நடிகர் சயீப் அலிகான், தயாரிப்பாளர் பர்கான் அக்தர், இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், முகமது ஆயுப், அபர்ணா புரோகித் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆரத்யா கொடுத்த புகாரின் பேரில் நடிகர் சயீப் அலிகான் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கே.ஆர்.புரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story