திருச்சி விமான நிலையத்தில் சோதனையின்போது கடத்தல் தங்கத்தை விழுங்கிய வாலிபா்
திருச்சி விமான நிலையத்தில் சோதனையின்போது, கடத்தல் தங்கத்தை விழுங்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது; அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து, தங்கத்தை வெளியே எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
செம்பட்டு:
திருச்சி விமான நிலையத்தில் சோதனையின் போது, கடத்தல் தங்கத்தை விழுங்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து, தங்கத்தை வெளியே எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் சமீபகாலமாக தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 5.15 மணிக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர்.
தங்கத்தை விழுங்கிய வாலிபர்
அப்போது, அந்த விமானத்தில் வந்த அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சர்புதீனின் மகன் அசாருதீனை(வயது 22) அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அவர் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயன்றனர்.
ஆனால் அதற்கு முன்பே அவர் தங்கத்தை விழுங்கிவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை உடனடியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சுங்கத்துறை அதிகாரிகள் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தங்கத்தை வெளியே எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story