பெரம்பலூாில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்


பெரம்பலூாில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2021 4:10 AM IST (Updated: 25 Jan 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூாில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டப்பட்டது.

பெரம்பலூரில், மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் விடுதியில் தங்கி பயிலும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு கோலப்போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மகிளா கேந்திர திட்ட அலுவலர் ஜெயந்தி, ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் பிரேமா, மேகலா, விடுதி காப்பாளர் பாலம்பாள் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story