திருச்சியில் இருந்து ஆறுமுகநேரி வரை புறா பந்தயம்
திருச்சியில் இருந்து ஆறுமுகநேரி வரை புறா பந்தயம் நடந்தது.
ஆறுமுகநேரி பாரதிநகரில் உள்ள ஸ்டார் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் ஆண்டுதோறும் புறா பந்தய போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி திருச்சி காஜாமலை மைதானத்தில் இருந்து தொடங்கியது. போட்டியில் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 12 பேருக்கு சொந்தமான 70 புறாக்கள் கலந்து கொண்டன. நேற்று காலை 7.20 மணிக்கு அங்கிருந்து புறாக்களை பறக்க விட்டனர். வான்வழி தூரமான 300 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வருவதற்கு போட்டி நடைபெற்றது. இதில் பாரதிநகரை சேர்ந்த நாராயணன் என்பவரின் புறா 3 மணி நேரம் 33 நிமிடங்களில் தூரத்தை கடந்து வந்து முதலிடம் பெற்றது. இரண்டாவது பரிசுக்கான புறா 3 மணி நேரம் 35 நிமிடத்திலும், மூன்றாவது பரிசுக்கான புறா 3 மணி நேரம் 35 நிமிடம் 17 வினாடியிலும் வந்தது. இந்த 2 புறாக்களும் காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவருக்கு சொந்தமாக புறாக்கள் ஆகும், புறா உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை கிளப் தலைவர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story