தலைவாசல் அருகே தேனீக்கள் கொட்டி 5 பேர் காயம்
தலைவாசல் அருகே தேனீக்கள் கொட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
தேனீக்கள் கொட்டின
தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சி ராமசேஷபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகில் புளியமரம் உள்ளது. இந்த புளியமரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. நேற்று அந்த வழியாக சென்ற பொதுமக்களை தேனீக்கள் துரத்தித் துரத்தி கொட்டின.
இதில் காயம் அடைந்த சவுந்தரம், முத்தையன், கமலம், சுப்பிரமணி உள்பட 5 பேர் தப்பி ஓடி அருகில் உள்ள குடிநீர் தொட்டியிலும், கிணற்றிலும் குதித்துள்ளனர். அதன் பின்னர் பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள்
இதுபற்றி பொதுமக்கள் உடனே ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி நடேசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். ஆத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று புளிய மரத்தில் இருந்த தேனீக்களை மருந்து பீய்ச்சி அடித்து அழித்தனர்.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
Related Tags :
Next Story