கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை


கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Jan 2021 7:26 AM IST (Updated: 26 Jan 2021 7:37 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவர்
கோவில்பட்டி  அருகே உள்ள ஜமீன் தேவர்குளம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சதீஷ்( வயது 17). இவருடைய தாய் சுப்புத்தாய்.
சீனிவாசன் இறந்து விட்டதால் சதீஷ் தாய் பராமரிப்பில் கோவில்பட்டியில்உள்ள கல்லூரி ஒன்றில் படித்துவந்தார்.

விஷம் குடித்தார்
நேற்றுமுன்தினம் வீட்டில் சதீஷ் பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த சுப்புத்தாய் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து சதீஷை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுணடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

போலீசார் விசாரணை
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ் பரிதாபமாக இறந்தார். வயிற்றுவலி காரணமாக சதீஷ ்விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்( பொறுப்பு)பத்மாவதி, சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணிஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story