மாவட்ட செய்திகள்

சேலத்தில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி மறுப்பு + "||" + Denial of permission to hold tractor rally

சேலத்தில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி மறுப்பு

சேலத்தில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி மறுப்பு
டிராக்டர் பேரணி நடத்த அனுமதி மறுப்பு
சேலத்தில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

டிராக்டர் பேரணி
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதையடுத்து சேலத்திலும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.

ஆர்ப்பாட்டம்
இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறும்போது வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் இருந்து  50 டிராக்டர்கள், 200 மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்தோம். 

ஆனால் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை (இன்று) டிராக்டர்களை வரிசையாக நிறுத்தி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினர்.

கடும் நடவடிக்கை
இந்த நிலையில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில், சேலத்தில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் கொரோனா தொற்று காரணமாக பேரணி, ஊர்வலம் நடத்த கலெக்டரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். எனவே சேலத்தில் டிராக்டர் பேரணி நடத்தினால், டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது
டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கைது செய்தனர்.
2. டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை சந்தித்த பிரியங்கா காந்தி
டெல்லி டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்தார்
3. டிராக்டர் பேரணியின்போது விதிகளை மீறியதாக விவசாய தலைவர்கள் மீது வழக்குபதிவு
டெல்லி டிராக்டர் பேரணியின்போது விதிகளை மீறியதாக விவசாய சங்கத்தின் முக்கிய தலைவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
4. டிராக்டர் பேரணி: டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் - பதற்றம்
டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திவரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர்
5. டிராக்டர் பேரணி தொடர்பான 2-ம் நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி: டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாயிகள் உறுதி
டிராக்டர் பேரணியை டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாய அமைப்புகள் உறுதியாக இருப்பதால், 2-வது நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.