தமிழகத்தை முன்னேற செய்யும் எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
தமிழகத்தை முன்னேற செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லை என்று பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
உளுந்தூர்பேட்டை,
தமிழகத்தை முன்னேற செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லை என்று பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
பொய் பிரசாரம்
உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறந்த ஆட்சி நடந்து கொண்டு உள்ளது. தமிழகத்தை சிறந்த மாநிலமாக உருவாக்கி உள்ளார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மீண்டும் நல்ல திட்டங்களை வழங்க வேண்டும் என்றால், இந்த ஆட்சி தொடர வேண்டும். ஆகையால் நீங்கள் தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை நம்பி ஏமாற்றம் அடையாமல், அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.
தி.மு.க. வந்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். மக்களை முன்னேற செய்ய வேண்டும், தமிழகத்தை முன்னேற செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு இல்லை. அவர்களது குடும்பம் முன்னேற வேண்டும், தமிழகத்தை கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம் ஆகும்.
அமைதி பூங்கா
அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்து வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி உள்ள இந்த ஆட்சி தொடர வேண்டும். மக்களின் எண்ணங்களை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆகையால் இந்த ஆட்சி தொடர, நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து, வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story