ராமநாதபுரத்தில் குடியரசு தினவிழா
ராமநாதபுரத்தில் நடைபெற்ற 72-வது குடியரசுதின விழாவில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் 72-ஆவது குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார். காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக விழாவிற்கு வந்த மாவட்ட கலெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். விழாவில், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 57 காவலர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களையும், 20 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 123 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 59 ஆயிரத்து 122 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி விழாவில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரதீப்குமார், சப்-கலெக்டர் சுகபுத்ரா, ஊராட்சி உதவி இயக்குனர் கேசவதாசன், வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முகம்மது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோபு, மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், துணைத்தலைவர் வேலுசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட நீதிபதி பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், குடும்ப நல மாவட்ட நீதிபதி பகவதியம்மாள், மகிளா விரைவு நீதிபதி சுபத்ரா, தலைமை குற்றவியில் நீதிபதி ப்ரீத்தா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி தங்கராஜ், நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதிகள் ஜெனிதா, ராதாகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லை, வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாகஉதவியாளர் பிலோமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கோட்டபொறியாளர் முருகன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலக சங்க கட்டிடத்தில் தலைவர் பழனிக்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் தமீம்ராசா, பொருளாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story