திருப்பூரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்: 222 பயனாளிகளுக்கு ரூ.6¼ கோடிக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்


திருப்பூரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்: 222 பயனாளிகளுக்கு ரூ.6¼ கோடிக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Jan 2021 12:02 AM IST (Updated: 27 Jan 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் 222 பயனாளிகளுக்கு ரூ.6¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.

திருப்பூரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்:
222 பயனாளிகளுக்கு ரூ.6¼ கோடிக்கு நலத்திட்ட உதவி
கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்
திருப்பூர்:

திருப்பூரில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் 222 பயனாளிகளுக்கு ரூ.6¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.

ரூ.6¼ கோடிக்கு நலத்திட்ட உதவிகள்

குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் குடியரசு தினவிழா நடந்தது. நேற்று காலை 8.10 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்த மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தேசியக்கொடி ஏற்றினார்.
பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், திறந்த ஜீப்பில்சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதையடுத்து, 222 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விருது
தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதல்-அமைச்சர் விருதை கலெக்டர் வழங்கினார். மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செலிவியர்கள், தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
விழாவில், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமிட்டல், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, மாநகர துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், சுந்தரவடிவேல் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 
முன்னதாக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்கள் மற்றும் புறாக்களையும் கலெக்டர் விஜயகார்த்திகேயன் பறக்கவிட்டார். கொரோனா அச்சத்தின் காரணமாக விழாவில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் குடியரசு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் தேசியக்கொடியேற்றப்பட்டது.
---------------
படம் உள்ளது.
----------
விழாவில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் மூவர்ண பலூனை  பறக்க விட்ட காட்சி.



Next Story