பாலக்கோடு அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா மாணவிகளை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்


பாலக்கோடு அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா மாணவிகளை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 27 Jan 2021 7:09 AM IST (Updated: 27 Jan 2021 7:09 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா

பாலக்கோடு:
பாலக்கோடு அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாணவிகளை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றுபவர் 56 வயது பெண் ஆசிரியை. இவர் கடந்த 21-ந் தேதி பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் 22, 23-ந் தேதிகளில் பள்ளிக்கு வரவில்லை. 
இதற்கிடையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், ஆசிரியைக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
மாணவிகளுக்கு அறிவுறுத்தல்
இந்த நிலையில், அவரது வகுப்பு மாணவிகள் 42 பேரை 25-ந்் தேதி முதல் 29-ந் தேதி வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி பள்ளி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. இதுதவிர, இந்த பள்ளியில் பணியாற்றும் 45 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் ஓரிரு நாளில் தெரிய வரும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story