கடன் தொல்லையால் மனமுடைந்து டிபன் கடையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கடன் தொல்லையால் மனமுடைந்து டிபன் கடையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Jan 2021 8:18 AM IST (Updated: 27 Jan 2021 8:18 AM IST)
t-max-icont-min-icon

ஆதம்பாக்கத்தில் கடன் தொல்லையால் மனமுடைந்த பெண் டிபன் கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் சாந்திநகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 49). இவரது மனைவி லட்சுமி(46). லட்சுமி பழண்டியம்மன் கோவில் தெருவில் டிபன் கடை ஒன்று நடத்தி வந்தார்.இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் உணவகத்திற்கான கட்டிட வாடகையை பல மாதங்களாக உரிமையாளருக்கு கட்ட முடியாமல் தவித்து வந்தார்.

தற்கொலை

மேலும் இதற்காக வேறு இடங்களில் கடன் வாங்கி செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால் கடந்த சில நாட்களாக லட்சுமி மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் டிபன் கடையில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுகுறித்து அறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்ப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story