நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு
நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை தண்டனை.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முனுசாமி மகன் குப்புசாமி(வயது 21). இவர் கஞ்சா மற்றும் சாராயத்தை தொடர்ந்து விற்பனை செய்து கொண்டு இருந்ததை அடுத்து வடபொன்பரப்பி போலீசார் குப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த குப்புசாமி கள்ளக்குறிச்சி சப்-கலெக்டரிடம் திருந்தி வாழ்வதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன் என்றும் நன்னடத்தை சான்று கொடுத்தார்.
இந்த நிலையில் நன்னடத்தையை மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரங்கப்பனூர், புதுப்பட்டு உள்ளிட்ட பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த குப்புசாமியை வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் கைது செய்து சிறையில் அடைத்தார். தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குப்புசாமியை சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக், சப்-கலெக்டர் ஸ்ரீகாந்துக்கு பரிந்துரை செய்தார். இதை சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் ஏற்று குப்புசாமியை 308 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து செஞ்சி சிறையிலிருந்த குப்புசாமியை கள்ளக்குறிச்சி சிறைக்கு போலீசார் மாற்றம் செய்தனர்.
Related Tags :
Next Story