ராமநத்தத்தில் டைல்ஸ் கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


ராமநத்தத்தில் டைல்ஸ் கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Jan 2021 10:35 AM IST (Updated: 27 Jan 2021 11:07 AM IST)
t-max-icont-min-icon

ராமநத்தத்தில் டைல்ஸ் கடையில் ரூ. 1 லட்சம் திருடு போனது.

ராமநத்தம், 

திருச்சியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் டைல்ஸ்கடை வைத்துள்ளார்.  நேற்று இரவு கடையை பூட்டி விட்டு தான் தங்கியிருந்த அறைக்கு சென்று விட்டார்.  காலையில் வந்து பார்த்த போது,  கடையின் இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் கல்லா பெட்டியில் இருந்த ரூ. 1 லட்சம் திருடு போய் இருந்தது. மேலும் 2 வாட்ச், செல்போன் ஆகியவையும் திருடு போனது.  தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே ராமநத்தம் அருகே பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருமாந்துரை சுங்கச்சாவடி அருகேமோட்டார் சைக்கிள் ஷோரூமிலும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதன் மூலம் ஒரே கொள்ளையர்கள்  இருவேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். 

அதன்பேரில் இருமாவட்ட போலீசாரும் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story