திருவள்ளூரில் குடியரசு தின விழா அணிவகுப்பில் மயங்கி விழுந்த பெண் போலீசால் பரபரப்பு
திருவள்ளூரில் குடியரசு தின விழா அணிவகுப்பில் மயங்கி விழுந்த பெண் போலீசால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் அங்கிருந்து இறங்கி மேடைக்கு சென்று அரசின் 29 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரத்து 181 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.
பெண் போலீஸ் மயங்கினார்
அப்போது போலீசாரின் அணிவகுப்பு மரியாதையில் துப்பாக்கி ஏந்தி நின்ற பெண் போலீஸ் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உடன் நின்றுக்கொண்டிருந்த சக பெண் போலீசார் உடனடியாக அவரை மீட்டு அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுத்தினார்கள். அப்போது அங்கு வந்த டாக்டர்கள் உடனடியாக அவரை பரிசோதனை செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலை உணவு சாப்பிடாமல் வந்ததும் வெயிலில் அதிக நேரம் நின்று கொண்டிருந்ததால் மயங்கி விழுந்ததும் தெரியவந்தது. அவருக்கு உணவு வழங்கிய போலீசார் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலகுரு மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story