திருமங்கலம் அருகேதனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி


திருமங்கலம் அருகேதனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி
x

திருமங்கலம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி நடந்தது

மதுரை

திருமங்கலம் அருகே கள்ளிகுடியில் இருந்து கல்லுப்பட்டி செல்லும் ரோட்டில் பலசரக்கு வணிக வளாகம் உள்ளது. இங்கு இரவு நேரத்தில் ஹெல்மெட் அணிந்து 4 மர்ம நபர்கள் வணிக வளாகத்தின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.  பூட்டை உடைக்க முடியாததால் அருகிலிருந்த தனியார் நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். அங்கு லாக்கரை திறக்க முயன்றபோது அலாரம் அடித்து உள்ளது. 

இதையடுத்து இருசக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.  

அதன்பேரின் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற 4 பேரையும் வலைவீசி வருகின்றனர்.

Next Story