டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
வேலூர் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்
காஞ்சீபுரம் மாவட்டம் ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40), லாரி டிரைவர். இவருக்கும், வேலூரை அடுத்த நாட்டார் மங்களத்தை சேர்ந்த விஜயசாந்தி (27) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக நாட்டார் மங்களத்தில் உள்ள ஒரு வீட்டில் சதீஷ்குமார் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
சதீஷ்குமார் கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதனால் மன உளைச்சலில் காணப்பட்ட அவர் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story