ஆறுமுகநேரி ராஜமன்யபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா
ஆறுமுகநேரி ராஜமன்யபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி ராஜமன்யபுரம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா கடந்த 13 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. 12-ம் நாளில் மாலை ஆராதனையை தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன் அடிகளார், தூத்துக்குடி ஜேசுராஜா அடிகளார் ஆகியோர் நிறைவேற்றினார்கள். இரவு புனித அந்தோணியாரின் உருவ சப்பர பவனி நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாள் காலையில் திருவிழா திருப்பலி மற்றும் சிறுவர் சிறுமியர் புதுநன்மை வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளும், மாலையில் நற்கருணை ஆசீரும், கொடியிறக்கமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை அலாசியுஸ் அடிகளார் ஆலய நிர்வாக கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Related Tags :
Next Story