கோவில்பட்டி: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2021 10:02 PM IST (Updated: 27 Jan 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:

குடியரசு தின விழாவின் போது டெல்லியில் நடந்த விவசாயிகளின் பேரணியில், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியதை கண்டித்தும், வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தொடர் மழையால் நடப்பாண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க கோரியும், பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்டு  கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

 ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அழகுமுத்துபாண்டியன், மாவட்ட உதவிச் செயலாளர் சேது ராமலிங்கம், நிர்வாக குழு உறுப்பினர் பரமராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் நகர துணை செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன், தாலுகா உதவி செயலாளர் ராமகிருஷ்ணன், தனியார் ஆலை ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் குருசாமி மற்றும் விஜயலட்சுமி, ஸ்ரீரெங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

Next Story