சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூரை சேர்ந்தவர் சிவா. இவரது மகன் ராஜ்குமார் என்கிற ஊமையன் (வயது 23). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 20.5.2019 அன்று வீட்டில் தனியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவரது வீட்டுக்கு சென்ற ராஜ்குமார், குடிக்க தண்ணீர் கேட்டார்.
உடனே அந்த சிறுமி, வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்தாள். அப்போது ராஜ்குமார், திடீரென சிறுமியை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமி, ராஜ்குமாரின் கையில் கடித்து வைத்து விட்டு, அருகில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு ஓடிச்சென்று நடந்த சம்பவம் பற்றி கூறி கதறி அழுதாள்.
5 ஆண்டு சிறை
இதுகுறித்து சிறுமியின் தாய் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி நீதிபதி எம்.எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2, 500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story