விருத்தாசலத்தில் என்ஜினீயர், தூக்குப்போட்டு தற்கொலை
விருத்தாசலத்தில் என்ஜினீயர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்
விருத்தாசலம்,
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் உமேஷ் (வயது 22). பி.இ. படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு உமேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story