தென்காசியில் நவீன மீன் விற்பனை நிலையம்- கலெக்டர் சமீரன் திறந்து வைத்தார்
தென்காசியில் நவீன மீன் விற்பனை நிலையத்தை, மாவட்ட கலெக்டர் சமீரன் திறந்து வைத்தார்.
தென்காசி:
தென்காசி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் கூட்டு பண்ணைய திட்டம் சார்பில், உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு வேளாண் எந்திரங்கள் குறித்த கண்காட்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதில் 16 வேளாண் எந்திர விற்பனையாளர்கள், வேளாண் கருவிகளின் பயன் மற்றும் ெசயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இதனை 38 உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் பிரதிநிதிகள் 95 பேர் பார்வையிட்டனர்.
பின்னர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் பிரதிநிதிகளும், வேளாண் எந்திர விற்பனை பிரதிநிதிகளும் கலந்துரையாடினர். ஒவ்வொரு குழுவுக்கும் தேவையான வேளாண் எந்திரங்கள் வாங்குவது குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது. வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) நல்லமுத்துராஜா, துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர். வேளாண் உதவி இயக்குனர் கனகம்மாள் நன்றி கூறினார்.
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சிவந்தி நகரில் மீன்வளத்துறை சார்பில், தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் விற்பனை நிலையத்தை கலெக்டர் சமீரன் திறந்து வைத்தார். மீன்வளத்துறை இணை இயக்குனர் தீபா, உதவி இயக்குனர் புஷ்ரா ஷப்னம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் அமைக்கப்பட்டுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும் கலெக்டர் சமீரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தரக்கட்டுப்பாடு மேலாளர் பாஸ்கரன், நுகர்பொருள் வாணிப கழகத்தினுடைய பகுதி அலுவலர் வெங்கடேஷ், செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story