திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.
திசையன்விளை:
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
சுடலை ஆண்டவர் கோவில்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திசையன்விளை வடக்கு தெரு சுடலை ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், பல்வேறுகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
விழாவின் சிகர நாளான இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலையில் 6-ம் கால யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இன்று கும்பாபிஷேகம்
காலை 10.40 மணிக்கு கோவில் கோபுரத்துக்கும், சுடலை ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இரவில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story