பெரம்பலூர் அருகே வயலில் உடல் கருகிய நிலையில் விவசாயி பிணம்; போலீசார் விசாரணை
பெரம்பலூர் அருகே வயலில் உடல் கருகிய நிலையில் விவசாயி பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே வயலில் உடல் கருகிய நிலையில் விவசாயி பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). விவசாயியான இவருக்கு லீலாவதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். வெங்கடேசன் நேற்று காலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர்-மலையப்ப நகர் பிரிவு சாலை அருகே உள்ள தனது வயலுக்கு சென்றார்.பின்னர் வெகுநேரமாகியும் வெங்கடேசன் வீடு திரும்பாததால், அவரை குடும்பத்தினர் தேடிச்சென்றனர். இந்நிலையில் மாலையில் வெங்கடேசன் தனது வயலில் உள்ள மின்கம்பத்தின் அருகே உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கொலையா?
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்துக்கொலை செய்து, உடலுக்கு தீ வைத்து சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story