பரமத்திவேலூர் அருகே, கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி


பரமத்திவேலூர் அருகே, கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 28 Jan 2021 7:34 AM IST (Updated: 28 Jan 2021 7:46 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

பரமத்திவேலூர்,

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் பிரபு (வயது 25). பால் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் சந்துரு (18). ஈரோட்டில் ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் நண்பர்கள்.

இந்த நிலையில் பிரபு தனது காரில் நண்பர் சந்துருவுடன் பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு காரில் கொண்டு வந்த பாலை சப்ளை செய்து விட்டு மீண்டும் மொடக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி தொலை தொடர்பு அலுவலக குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறம் தலைகுப்புற கவிழ்ந்தது. 

இதில்‌ காரில் அமர்ந்து வந்த சந்துரு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காரை ஓட்டி வந்த பிரபு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார். இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார்  பிரபுவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபு இறந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story