அரசு பஸ் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
வாடிப்பட்டி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாடிப்பட்டி,
மதுரையில் இருந்து திண்டுக்கலுக்கு அரசு பஸ் நேற்று காலை 11 மணிக்கு புறப்பட்டது. அந்த பஸ்சை திண்டுக்கல் கள்ளிமந்தையத்தை சேர்ந்த டிரைவர் வீரமுத்து (வயது 47) ஓட்டினார். வத்தலக்குண்டு சவுந்திரபாண்டி(55) நடத்துனராக இருந்தார். பஸ்சில் 20 பயணிகள் இருந்தனர்.
வாடிப்பட்டிக்கு முன்பாக கட்டக்குளம் பிரிவு என்ற இடத்தில் வந்தபோது திடீரென நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி வலதுபுறம் பஸ் கவிழ்ந்தது.
இதில் பஸ்சின் முன்புறம் கண்ணாடி உடைந்தது. அதன் வழியாக பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த வாடிப்பட்டி தீயணைப்புநிலைய அதிகாரி சதகத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்களும், வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
6 பேர் காயம்
இதில் காயமடைந்தவர்களுக்கு வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்தனர். படுகாயமடைந்த டிரைவர் வீரமுத்து, நடத்துனர் சவுந்தரபாண்டி மற்றும் மதுரை கருப்பாயூரணி ராஜன்பிரபு (62), திண்டுக்கல் ஜேராபீவி(44), சிவகாசி முருகேசன் (62) ஆகிய 6 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story