ஆண் குழந்தை தத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது
ஆண் குழந்தை தத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது, கலெக்டர், பெயர் சூட்டி வழங்கினார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 21-ந் தேதியன்று பிறந்த ஆண் குழந்தையை குடும்பத்தினர் வளர்க்க இயலாத காரணத்தால் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி அக்குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அந்த ஆண் குழந்தைக்கு ஆதவன் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி பெயர் சூட்டினார். பின்னர் திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் குழந்தை நலக் குழுமத்திடம் அக்குழந்தையை ஒப்படைத்தார்.
அப்போது மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) கந்தன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story