மதுரையில் பெண் கொலையில் 4 பேர் கைது


மதுரையில் பெண் கொலையில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2021 8:01 PM IST (Updated: 28 Jan 2021 8:01 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பெண் கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்

மதுரை:

மதுரை பெருங்குடி சிவசக்தி நகரை சேர்ந்தவர் முகமது கவுஸ். இவரது மனைவி காத்தூன் பீவி (வயது55). இவர் தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசித்து வந்துள்ளார்.இது தொடர்பாக அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இடையே பிரச்சினை இருந்து வந்தது. 

இந்த பிரச்சினையில், அவர்கள் அரிவாள்மனை மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியதில் காத்தூன்பீவி பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து, பெருங்குடி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, இப்ராகிம்ஷா, சதாம்உசேன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

Next Story