கஞ்சா விற்ற மீனவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் போலீஸ் அதிரடிகஞ்சா விற்ற மீனவர் உள்பட 4 பேர் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற மீனவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை அமோகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பாக்கியநாதன் விளை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கோவில்பிள்ளை விளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வபதி (வயது 40) என்பவரை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
டி.சவேரியார்புரம் அதே போன்று தாளமுத்துநகர் டி.சவேரியார்புரத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக டி.சவேரியார்புரத்தை சேர்ந்த அந்தோணி பிரைட்டன் (46) என்பவரை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தாளமுத்துநகர் சோட்டையன்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த எபனேசர் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மீனவர்
மேலும் சமீர்வியாஸ்நகரை சேர்ந்த மீனவர் அய்யப்பன் (19) என்பவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story