கச்சிராயப்பாளையம்: சாராயம் விற்ற 4 பெண்கள் கைது


கச்சிராயப்பாளையம்: சாராயம் விற்ற 4 பெண்கள் கைது
x
தினத்தந்தி 28 Jan 2021 10:25 PM IST (Updated: 28 Jan 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

சாராயம் விற்ற 4 பெண்கள் கைது செய்து அவர்களிடம் இருந்து 200 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கச்சிராயப்பாளையம்.

கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட க.அலம்பலம் கிராமத்தில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.’

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, வினோத்குமார் உள்ளிட்ட போலீசார் க.அம்பலம் கிராமத்தில் சாராய வேட்டையில் அதிரடியாக களம் இறங்கினர். 

அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த விஜயா(வயது35), கீதா(33), தெய்வானை(47), கலைச்செல்வி(40) ஆகிய 4 பெண்களை கைது செய்து அவர்களிடமிருந்து 200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

சாராய ஊறல் பதுக்கல்

அதேபோல் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிகுமார் தலைமையிலான மற்றொரு தனிப்படையினர் கல்வராயன் மலையில் உள்ள ஆரம்பூண்டி வனப்பகுதியில் சாராய வேட்டை நடத்தினர். இதில் அங்கு 5 பேரல்களில் மர்மநபர்கள் 1,000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை போலீசார் அழித்தனர். 
இது தொடர்பாக ஆரம்பூண்டியை சேர்ந்த அண்ணாமலை மகன் லட்சுமணனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கச்சிராயப்பாளையம் பகுதிக்குட்பட்ட கரடிசித்தூர், மண்மலை, எடுத்தவாய்நத்தம், சாவடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக நடத்திய வேட்டையில் சாராயம் விற்பனை செய்ததாக 31 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 1,000 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்துள்ளதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story