10 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
சுருளி அருவியில் 10 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்தது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் சுருளி அருவி விளங்குகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு, கடந்த 25-ந் தேதி முதல் சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்தது.
இன்று விடுமுறை தினம் என்பதால், சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அவர்களிடம் அருவிக்கு செல்ல நபர் ஒருவருக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூல் செய்யப்பட்டது.
அப்போது வனத்துறையினர் அருவியில் குளிப்பதற்கு அனுமதி இல்லை என்று தடை விதித்தனர்.
இதற்கு சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குளிக்க தடையால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதுகுறித்து தேனி மாவட்ட மேகமலை வன உயிரின காப்பாளர் போஸ்லே சச்சின் துக்கரமிடம் கேட்டபோது, சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அனுமதி பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
Related Tags :
Next Story