தோகைமலை-தரகம்பட்டி மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்


நாடகபட்டி மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.
x
நாடகபட்டி மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.
தினத்தந்தி 29 Jan 2021 12:23 AM IST (Updated: 29 Jan 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தோகைமலை அருகே நாடகபட்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து ஊர் நாட்டாமை, காரியக்காரர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜைகள் நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள்  மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதேபோல் தரகம்பட்டி அருகே ைவயாளிமடையில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை ஊற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story