அரசு பஸ் டயர் பஞ்சராகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு


அரசு பஸ் டயர் பஞ்சராகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 29 Jan 2021 1:42 AM IST (Updated: 29 Jan 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் டயர் பஞ்சராகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே இருந்து வட்டார போக்குவரத்து அலுவலர் சாலைக்கு செல்வதற்காக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடக்க முயன்ற போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. 

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது நடைபெற்று வருகிறது. 

அதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் இருபுறமும் ஒரு பகுதியில் மட்டும் வாகனங்கள் சென்று வருகின்றன. அதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே வந்த போது திடீரென பஸ்சின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனது. 

அதனால் உடனடியாக சாலையோரம் பஸ் நிறுத்தப்பட்டது அதில் இருந்த பயணிகள் மற்றொரு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். 

பஞ்சரான டயரை மாற்றும் பணியில் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

Next Story