சேலம் புதிய பஸ் நிலையத்தில் தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் சரவணன். இவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் எந்திர கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் சம்பளம் வாங்கிக்கொண்டு சொந்த ஊர் செல்வதற்காக மைசூருவில் இருந்து சேலத்திற்கு வந்தார். பின்னர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவரது அருகில் ஒரு பெண் நைசாக வந்து அவரிடம் பேச்சு கொடுத்து உள்ளார். பின்னர் பணம் கொடுத்தால் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று அவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சரவணனை அந்த பெண் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்து சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்
பின்னர் அந்த வாலிபரும், பெண்ணும் சேர்ந்து சரவணனை தாக்கினர். இதனால் மயக்கம் அடைந்து அவர் கீழே விழுந்தார். பின்னர் சரவணன் பாக்கெட்டில் இருந்து ரூ.14 ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து சரவணன் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 33 வயது பெண் மற்றும் சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (வயது 38) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சரவணனை அந்த ெபண் விபசாரத்திற்கு அழைத்து சென்றதும், பின்னர் இருவரும் சேர்ந்து அவரை தாக்கி பணம், செல்போன் பறித்து சென்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story