புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்


புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2021 2:37 AM IST (Updated: 29 Jan 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.

புளியங்குடியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழா நாட்களில் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி அழைப்பு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையை தொடர்ந்து சுவாமி வீதிஉலா நடந்தது.

10-ம் திருநாளான நேற்று தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. காலையில் சுவாமி தேரில் எழுந்தருளினார். இதையடுத்து பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் ரத வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் பங்குனி உத்திர தேர் திருப்பணி குழு தலைவர் பி.எஸ்.சங்கரநாராயணன், கோவில் நிர்வாக அதிகாரி கணேஷ் குமார், ஆய்வாளர் லதா, தக்கார் சாந்தி, நகர அ.தி.மு.க. செயலாளர் பரமேஸ்வர பாண்டியன், எஸ்.வி. கல்லூரி சேர்மன் முருகையா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story