100 நாள் வேலை திட்ட பணிகளை மத்திய அரசு அதிகாரி ஆய்வு


வல்லணி கிராமத்தில் கண்மாய் சீரமைக்கும் பணியை மத்திய அரசு இணை செயலாளர் தீனாேஜாகிரி பார்வையிட்ட போது எடுத்த படம்
x
வல்லணி கிராமத்தில் கண்மாய் சீரமைக்கும் பணியை மத்திய அரசு இணை செயலாளர் தீனாேஜாகிரி பார்வையிட்ட போது எடுத்த படம்
தினத்தந்தி 29 Jan 2021 4:45 AM IST (Updated: 29 Jan 2021 4:45 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதி திட்ட பணிகளை மத்திய அரசின் அரசு இணை செயலர் நேரில் ஆய்வு செய்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதி திட்ட பணிகளை மத்திய அரசின் அரசு இணை செயலர் நேரில் ஆய்வு செய்தார்.

100 நாள் வேலை திட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் மத்தியஅரசின் நிதி உதவியுடன் மகாத்மாகாந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதிதிட்டம் செயல்படுத்தபடுகிறது. கடந்த 2019-2020 மற்றும் 2020-2021 ஆண்டிற்கு இந்த திட்டம் முறையாக செயல்படுத்தபடுகிறதா? என்று மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் திட்ட அரசு இணைச் செயலாளர் தீனா ஜோகிரி மற்றும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் திட்டத்துறை இயக்குனர் வீரேந்திரசர்மா தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையொட்டி மதுரையில் இருந்து சிவகங்கை வந்த இந்த குழுவினரை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வரவேற்று அழைத்து சென்றார்.

கண்மாய் சீரமைக்கும் பணி

பின்னர் இந்த குழுவினர் சிவகங்கையை அடுத்த வாணியங்குடி ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கு 100 நாள்வேலை திட்டம் தொடர்பான பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அதன் பிறகு வாணியங்குடி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பணை கட்டுதல், வரத்துக்கால்வாய் சீரமைத்தல், கால்நடைப் பராமரிப்பிற்கான ஆட்டுக்கொட்டகை மற்றும் மாட்டுக்கொட்டகை கட்டுதல், சாலைகள் சீரமைத்தல், தரிசு நிலங்களில் வரப்பு கட்டுதல், தனிநபர் திறந்தவெளி கிணறு அமைத்தல் போன்ற பணிகள் முடிக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டனர். பின்னர் வல்லணி கிராமத்தில் கண்மாய் வரத்துகால் சீரமைக்கும் பணி நடைபெறுவதை பார்வையிட்டனர்.
பின்னர்100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் வேலை அட்டைமற்றும் அவர்களுக்கு வங்கிகளின் மூலம் ஊதியம் ்வழங்கப்படுவதையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் முத்து மீனாள், ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்புப் பொறியாளர் குற்றாலலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் .வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் அருண்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story