4 மாதங்களாக பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 3 குரங்குகளை கூண்டு வைத்து சாதுர்யமாக பிடித்த வனத்துறையினர்


4 மாதங்களாக பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 3 குரங்குகளை கூண்டு வைத்து சாதுர்யமாக பிடித்த வனத்துறையினர்
x
தினத்தந்தி 29 Jan 2021 7:55 AM IST (Updated: 29 Jan 2021 7:55 AM IST)
t-max-icont-min-icon

4 மாதங்களாக பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 3 குரங்குகளை கூண்டு வைத்து சாதுர்யமாக பிடித்த வனத்துறையினர் பொதுமக்கள் பாராட்டு.

ஆலந்தூர், 

மதுராந்தகம் அருகே உள்ள கொளம்பாக்கம் கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகமாகி விட்டதாகவும், அங்கு வீட்டுக்குள் புகுந்து குழந்தைகள் உள்பட 16 பேரை கடித்து காயப்படுத்தியதாக கூறி அதை பிடிக்குமாறு கிண்டி வனசரகருக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசன் தலைமையில் வனத்துறையினர் கொளம்பாக்கம் கிராமத்திற்கு சென்றனர். அப்போது, பொதுமக்களை 4 மாதங்களாக அச்சுறுத்திய 3 குரங்குகளை பிடிக்க கூண்டு வைத்து அதில் பழங்களை போட்டு காத்திருந்தனர்.

சுமார் 6 மணி நேரம் போராட்டத்துக்கு பின் குரங்குகள் பழங்களை சாப்பிட கூண்டிற்குள் சென்றபோது சிக்கின. இதை கண்டதும் கிராம மக்கள் மகிழ்ச்சியில் கைத்தட்டி பாராட்டி நிம்மதி பெரு மூச்சு விட்டனர். பின்னர் குரங்குகளை அடர்ந்த காட்டு பகுதியில் கிண்டி வனத்துறையினர் விட்டதாக தெரிவித்தனர்.



Next Story