பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 Jan 2021 9:53 AM IST (Updated: 29 Jan 2021 9:53 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் கனகவல்லி புரம் தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் பிரபாகரன் (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் ஏன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாய் என அவரை கண்டித்தனர்.

தற்கொலை

இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகே உள்ள பாழடைந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story