தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு


தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு
x
தினத்தந்தி 29 Jan 2021 6:06 PM IST (Updated: 29 Jan 2021 6:06 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு இன்று நடந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு இன்று நடந்தது.

ஊர்க்காவல்படை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல்படையில் காலியாக இருந்த 40 பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆயுதப்படையில் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து 45 நாட்கள் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி நிறைவு நாள் விழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கவாத்து மைதானத்தில் இன்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி, பயிற்சி முடித்த ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து ஊர்க்காவல்படையினர் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் ஊர்க்காவல் படை வட்டார தளபதி பாலமுருகன், துணை வட்டார தளபதி கவுசல்யா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், செல்வக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
------------------


Next Story