கோவை அருகே பயங்கரம் பெண் அடித்து கொலை
கோவை அருகே பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். முகத்தை சிதைத்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவரு கின்றனர்.
சரவணம்பட்டி
கோவை அருகே பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். முகத்தை சிதைத்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவரு கின்றனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;-
பெண் கொலை
கோவை மாவட்டம் அன்னூர் தாலுகா எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் அக்ரஹாரசாமக்குளம் ஊராட்சியில் 160 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய குளம் உள்ளது. இந்த குளத்திற்கு செல்லக்கூடிய பாலத்தின் அடியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக கோவில்பாளையம் போலீசாருக்கு நேற்று காலை அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
முகம் சிதைக்கப்பட்டு
இந்த தகவலின் அடிப்படையில் கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ மணிகண்டன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அதனைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது அவரிடம் செல்போன் இருந்தது.
காரணம் என்ன?
போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை செய்த போது அந்த பெண் எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட கீரணத்தம் ஊராட்சி மசக்கவுண்டன் தோட்டத்தை சேர்ந்த பண்ணாரி (45) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண்ணை கொலை செய்தவர்களை வலை வீசி ேதடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் துணை சூப்பிரண்டு சூரிய மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story