ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
கோவை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முருகசாமி (வயது 43). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந் தேதி போக்சோ வழக்கில் கைதானார்.
பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி திருப்பூர் மகிளா கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு நேற்று காலை 11.35 மணி அளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அங்கிருந்த சிறை காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story