ராமநாதபுரம்: அரசு பள்ளியை தரம் உயர்த்த கலெக்டரிடம் மனு


நகராட்சி பள்ளியை தரம் உயர்த்தக்கோரி பெற்றோர்கள், மாணவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தபோது எடுத்தபடம்.
x
நகராட்சி பள்ளியை தரம் உயர்த்தக்கோரி பெற்றோர்கள், மாணவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தபோது எடுத்தபடம்.
தினத்தந்தி 29 Jan 2021 9:47 PM IST (Updated: 29 Jan 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பெற்றோர்கள், மாணவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பெற்றோர்கள், மாணவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மாணவ-மாணவிகள்

ராமநாதபுரம் நகரில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகளில் 300 மாணவ-மாணவிகளும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை 169 பேரும் படித்து வருகின்றனர். இதில் 15 மாணவர்கள் இந்த ஆண்டு 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் வரும் கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு படிப்பதற்குதற்கு அரசு பள்ளி எதுவும் ராமநாதபுரத்தில் இல்லை. 

இதன்காரணமாக இந்த மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்கும் மருத்துவ கல்லூரியில் தமிழக அரசின் சிறப்பு இடஒதுக்கீட்டில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு ராமநாதபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி எதுவும் இல்லை. 

மனு

எனவே, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்து அவசர அவசியம் கருதி வரும் கல்வி ஆண்டு முதல் ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மற்றும் பெற்றோர்கள் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Next Story