கந்தம்பாளையம் அருகே கல்லூரி மாணவர் மர்ம சாவு


கந்தம்பாளையம் அருகே கல்லூரி மாணவர் மர்ம சாவு
x
தினத்தந்தி 29 Jan 2021 10:35 PM IST (Updated: 29 Jan 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

கந்தம்பாளையம் அருகே கல்லூரி மாணவர் மர்மமான இறந்து கிடந்தார்.

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே கல்லூரி மாணவர் மர்மமான இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள சீராப்பள்ளி கொளத்துப்பாளையம் அருந்ததியர் தெருவில் வசித்து வருபவர் கொண்டப்பன். கூலி வேலை செய்து வருகிறார் இவரது மகன் ஸ்ரீநாத் (வயது 18). இவர் காளிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தற்போது கொரோனா காரணமாக கல்லூரி விடுமுறையில் இருப்பதால் வீட்டில் தங்கியிருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்தார். நேற்று  இரவு இவர் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தேர்த்திருவிழாவை பார்க்க செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கொளத்துபாளையத்திலிருந்து நடந்து சென்றதாக தெரிகிறது. பின்னர் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. 

சாவில் மர்மம்

இந்த நிலையில் மாலா கோவில் சாலையோரத்தில் இருந்த ஒரு குழியில் ஸ்ரீநாத் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இரவு நேரம் என்பதால் யாரும் அவரை பார்க்கவில்லை. இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் ஸ்ரீநாத் மர்மமாக இறந்து கிடப்பதை பார்த்து நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் போலீசார் பிணத்தை கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீநாத் குடும்பத்தினர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீநாத்தின் சாவில் மர்மம் உள்ளதாகவும், இதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டியும் புகார் அளித்தனர். இதையடுத்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவர் சாவில் நிலவும் மர்மம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story