வெண்ணந்தூர்: நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி கூடங்கள் வேலை நிறுத்தம்


வெண்ணந்தூர்: நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி கூடங்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 29 Jan 2021 10:41 PM IST (Updated: 29 Jan 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

வெண்ணந்தூர் பகுதியில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி கூடங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் பகுதியில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி கூடங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன.

விசைத்தறி கூடங்கள்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர், அத்தனூர், ஓலப்பட்டி, சவுதாபுரம், மின்னக்கல், நெ.3 கொமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் 50 கிலோ எடை கொண்ட நூல் ரூ.8,900-த்தில் இருந்து தற்போது ரூ.12,900 ஆக உயர்ந்துள்ளது. 

வேலை நிறுத்தம்

இந்த நிலையில் தொடர் நூல் விலையேற்றத்தை கண்டித்தும் உடனடியாக நூல் விலையை குறைக்ககோரியும் வெண்ணந்தூர் பகுதியில் சுமார் 7 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 50 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்ட்டுள்ளது.

இது குறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில், நூல் விலையேற்றத்தால் தற்போது விசைத்தறி தொழிலே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு இதை கவனத்தில் கொண்டு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து விசைத்தறி தொழிலை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

Next Story