என்ஜினீயரிங் பணியால் ரெயில் சேவை ரத்து


என்ஜினீயரிங் பணியால் ரெயில் சேவை ரத்து
x
தினத்தந்தி 30 Jan 2021 2:45 AM IST (Updated: 30 Jan 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரிங் பணியால் திருச்சி-பாலக்காடு டவுன் மார்க்கத்தில் ரெயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் பணி காரணமாக திருச்சி-பாலக்காடு டவுன் மார்க்கத்தில் ஒரு பகுதியாக மட்டும் ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. வண்டி எண் 06844 பாலக்காடு டவுன்-திருச்சி ஜங்ஷன் இடையேயான சிறப்பு ரெயில் ஒரு பகுதியாக ஈரோடு-திருச்சி ஜங்ஷன் இடையே நேற்று முதல் வரும் 2-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் பாலக்காடு டவுனில் இருந்து ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் வண்டி எண் 06843 திருச்சி ஜங்ஷன்-பாலக்காடு டவுன் சிறப்பு ரெயில் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷன்-ஈரோடு இடையே இன்று (சனிக்கிழமை) முதல் வரும் 3-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து பாலக்காடு டவுன் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Next Story