தமிழகத்தில் இருந்து டெல்லி சென்று விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்துவோம்-அய்யாக்கண்ணு பேச்சு


தமிழகத்தில் இருந்து டெல்லி சென்று விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்துவோம்-அய்யாக்கண்ணு பேச்சு
x
தினத்தந்தி 30 Jan 2021 2:58 AM IST (Updated: 30 Jan 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இருந்து டெல்லி சென்று விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்துவோம் என்று அய்யாக்கண்ணு கூறினார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியபோது, “டெல்லியில் 141 நாட்கள் விவசாயிகள் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 300-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தலைவர்களை ஒருங்கிணைத்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ ஆர்டினேஷன் கமிட்டி உருவாக்கப்பட்டது. இந்தக்கமிட்டியில் வி.எம்.சிங் கலந்துகொண்டார். அவர் 20 அமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். மற்ற அமைப்பாளர்கள், நிர்வாகிகள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக வி.எம்.சிங் அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. அதனால் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாட்டிலிருந்து 100 விவசாயிகளுடன் டெல்லியில் சென்று போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. வருங்கால சந்ததியினர் நலனுக்கால ஒவ்வொரு நாளும் ஒரு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து போராடுவது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். ஆனால் டெல்லி செல்லும் தேதி முடிவு செய்யவில்லை” என்றார்.

Next Story