தி.மு.க. கூட்டணியில் துறையூர் தொகுதியில் போட்டியிட விருப்பம்-அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் முடிவு
தி.மு.க. கூட்டணியில் துறையூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் இருப்பதாக அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் பொன்.முருகேசன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி தலைவர் புதியவன், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சிவலிங்கம், திருச்சி மாவட்ட செயலாளர் சுதாகர், கரூர் மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தலைவர் பொன்.முருகேசன் கூறுகையில், "எங்களது கட்சிக்கு தேர்தல் ஆணையம் செருப்பு சின்னம் ஒதுக்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதி பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் செருப்பாக உழைப்போம். எங்கள் கட்சி முதன்முறையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வருவதால் கூட்டணி சார்பில் துறையூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் விருப்ப மனு அளித்துள்ளோம். உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொன்னால், அதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்"என்றார்.
Related Tags :
Next Story