வள்ளியூர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை


வள்ளியூர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 30 Jan 2021 3:26 AM IST (Updated: 30 Jan 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வள்ளியூர் அருகே சமூகரெங்கபுரத்தை அடுத்த சீலாத்திகுளத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 60). விவசாயி. இவர் கடன் ெதால்லையால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று பெரியசாமி வள்ளியூரில் உள்ள தனியார் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், வள்ளியூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த பெரியசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story