கரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கரூர்
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்க வேண்டும். அவர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் சிறப்புரை ஆற்றினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகேசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கலாவதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story