மேய்ச்சலுக்காக கொண்டு வரப்படும் வாத்துகள்
வாத்துகளை மேய்ச்சலுக்காக கூடலூர் ஒட்டாண்குளம் பகுதிக்கு கொண்டு வந்து உள்ளனர்.
தேனி:
கூடலூர் ஒட்டாண்குளம் பகுதி விவசாயிகள் தங்களது வயல்வெளிகளில் முதல்போக நெற்பயிர்களை சாகுபடி செய்திருந்தனர்.
இந்த நிலையில் அவை விளைந்து அறுவடைக்கு தயாராகி இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த சாரல் மழையால் ஒட்டான்குளம் பகுதிகளில் நெற்பயிர்கள் சாய்ந்தன.
சில இடங்களில் நெற்கதிர்கள் சாய்ந்து முளைக்கும் தருவாயில் இருந்தது. இதற்கிடையே தற்போது இந்தப் பகுதிகளில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் 2-ம்போக நெல் சாகுபடிக்காக வயல்களில் நாற்று நட்டு வருகின்றனர். விவசாயிகளும் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உழவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைப் பயன்படுத்தி வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வாத்துகளை மேய்ச்சலுக்காக கூடலூர் ஒட்டாண்குளம் பகுதிக்கு கொண்டு வந்து உள்ளனர்.
வாத்துகள் வயல்களில் சிதறிய நெல்மணிகளையும், புழு, பூச்சிகளையும் உணவாக தின்று வருகின்றன.
அதிகாலை நேரங்களில் வாத்துகள் இடும் முட்டைகளை சேகரித்து கேரள மாநிலம் எர்ணாகுளம், கோட்டயம் பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story